மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் .நாளுக்குநாள் வளர்ந்து வரும் நவீன வாழ்க்கைக்கு ஏற்ப மனிதர்களுக்கு மன அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் மனழுத்தத்திலிருந்து விடுபட மக்களும் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக சிலர் மனழுத்தத்திலிருந்து நடனம், யோகா, இசை, சுற்றுலா செல்வது போன்ற செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கின்றனர். அந்த வகையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஒரு தனியார் நிறுவனம் புது முயற்ச்சியை செயல்படுத்தியுள்ளது.அதாவது நிர்வாண கப்பல் பயண வசதியை ஏற்பாடு செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS
நிர்வாண கப்பல் வசதி :
டெக்ஸாஸை மையமாகக் கொண்ட நிறுவனமான Bare Necessities இத்தகைய விசித்திரமான நிர்வாண கப்பல் வசதியை மேற்கொண்டுள்ளது. அதாவது மன அழுத்தத்திலுள்ள நபர்களுக்கு ஒரு தனித்துவமான பயணத்தை வழங்குவது தான் இதன் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அற்புதமான, மன அழுத்தமில்லாத, ஆடையில்லாத பயண அனுபவத்தை கொடுக்கும் உலகின் ஒரே கப்பல் பாதை இது தான். 1990 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு இதுபோன்ற பயணத்தை வழங்கி வரும் இந்த நிறுவனம், இதற்காக 9 விதிமுறைகளை வகுத்துள்ளது. பயணிகள் விதிமுறைகளை மீறினால் உடனடியாக கப்பலில் இருந்தது வெளியேற்றப்படுவர்.
சடலங்களை விற்று வருவாய் ஈட்டிய கேரள அரசு ! 3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவிப்பு – மருத்துவ மாணவர்கள் பயன்பெறுவர் என தகவல் !
இது தொடர்பாக தனது பயண அனுபவத்தை 67 வயதான பயணி Reddit பகிர்ந்துள்ளார், குறிப்பாக இந்த கப்பலின் கேப்டனின் அனுமதிக்கு பிறகு தான் பயணிகள் ஆடையில்லாமல் உலாவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கப்பல் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்படும் போது பயணிகள் அனைவரும் முழு ஆடை அணிந்திருக்க வேண்டும்.
நிர்வாண கப்பலின் விதிமுறைகள் :
எப்போதும் உட்கர்ந்து, ஒரு சிறிய துணியால் உடலை மூடிக்கொள்ள வேண்டும்.
மற்ற பயணிகளின் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக்கூடாது.
மேலும் எல்லோர் முன்னிலையிலும் காதல் செய்தல் மற்றும் காதல் எண்ணத்தில் மற்றவர்களை தொடுதல் கூடாது.
சட்ட விரோதமான பொருட்களை கப்பலுக்குள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.