தற்போதைய காலகட்டத்தில் மாணவ மாணவியர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு NMMS திறனறிவு என்ற தேர்வை வருடந்தோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. எனவே இந்த தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மாணவர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இன்னும் விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது NMMS திறனறிவு தேர்வுக்காக விண்ணப்பிக்காத மாணவர்கள் வருகிற ஜனவரி 31ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.