
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை Airport-ல், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் உயர்வு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
வாகன நிறுத்தம் கட்டணம்:
தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மல்டி லெவல் அடுக்குமாடி கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வந்தது.
சென்னை Airport-ல் பார்க்கிங் கட்டணம் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
அப்போதே இந்த பார்க்கிங்கில் வாகனம் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், அதற்கான வழிகள் தெளிவாக இல்லை என்று பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அப்போது இருந்த கட்டணத்தை விட அதிகமாக உயர்த்தியது. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு , இன்று முதல் மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 85 ஆக உயர்த்தியுள்ளது.
அதே போல் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கு,ரூ. 525 ஆக இருந்தது, தற்போது ரூ.550 ஆக உயர்த்தியுள்ளது. டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ல் இருந்து ரூ.330 ஆக அதிகரிப்பு. அதே போல் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1,050ல் இருந்து, ரூ.1,100 ஆக அதிகரிப்பு. பஸ் மற்றும் லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம்,ரூ.630 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.660 ஆக உயர்ந்துள்ளது.
டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
அதிகப்பட்சம் 24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.2,100ல் இருந்து, தற்போது ரூ. 2,205 ஆக அதிகரிப்பு. இருசக்கர வாகனங்களுக்கும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதே போல் இரண்டு மணி ரூ.30 ஆக இருந்த நிலையில் இப்போது புதிய கட்டணமாக ரூ.35 ஆக வசூலிப்படுகிறது. மேலும் 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95. இப்போதைய கட்டணம் ரூ.100 என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்