செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சுதா சேஷையன் நியமனம் - தமிழறிஞர்கள் அதிர்ச்சி !செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சுதா சேஷையன் நியமனம் - தமிழறிஞர்கள் அதிர்ச்சி !

சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சுதா சேஷையன் நியமனம் செய்யப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுதா சேஷையன் திராவிட சிந்தனைகளுக்கு எதிரானவர் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வுக்கான மத்திய அரசு நிறுவனத்தின் துணைத் தலைவராக சுதா சேஷையனை மத்திய அரசு நியமித்திருக்கிறது. தற்போது சுதாசேஷையனின் நியமனம் தமிழறிஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்து ஓய்வு பெற்றவர் சுதா சேஷையன். மேலும் இவருக்கு தமிழக ஆளுநர் ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து அந்த ஒரு வருட பணி நீட்டிப்பும் கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில்,

தற்போது செம்மொழி தமிழாய்வு மத்திய அரசு நிறுவனத்தின் துணைத் தலைவராக மத்திய அரசு சுதா சேஷையனை நியமித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்குத் தமிழ் மொழி தொடர்பான குறிப்புகளைக் கொடுத்து வருபவர் சுதா சேஷையன்.

மேலும் அவைகள் தமிழுக்கும், திராவிடத்துக்கும் எதிராகவே இருந்து வருகிறது எனவும், அத்துடன் திராவிட கொள்கைகளுக்கு எதிராக ராஜ்பவன் பேசுவதன் பின்னணியில் இவரின் குறிப்புகளும் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி !

அந்த வகையில் திராவிட கொள்கைகளுக்கும் , திமுக அரசுக்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் சுதா சேஷையனை,

மேலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமித்திருப்பது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படவில்லை.

இந்த நியமனத்தை தொடர்ந்து தமிழறிஞர்கள், தமிழகக் கல்வியாளர்கள் அமர வேண்டிய பதவியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்ட, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் ஒருவரை நியமித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *