
கரும்பு ஜூஸ் ஓவரா குடிக்கிறீங்களா: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் தனது இன்னிங்ஸை வெயில் தொடங்கி விட்டது. அதனால் மக்கள் குளிர் பானங்கள் குடிக்கும் பழக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக கரும்பு ஜூஸை தான் பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கின்றனர். ஆனால் கரும்பு ஜூஸ் குடிக்கும் பல பேருக்கு அதனால் ஏற்படும் ஆபத்து குறித்து தெரியவில்லை. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் மக்களுக்கு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதாவது கரும்பு சாறை தினசரி அருந்தும் பொழுது, அதில் இருக்கும் அதிக சர்க்கரை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. சொல்ல போனால் 100 மில்லி லிட்டர் கரும்புச்சாற்றில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை இருக்கிறது. எனவே மக்கள் அதிகமாக உட்கொள்வதைத் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஜூஸ் போடாமல் அப்படியே கரும்பை சாப்பிட்டால் பைபர் மற்றும் நியூட்ரியன்ட் சத்துக்கள் கிடைக்கும். செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட சாஃப் டிரிங்ஸ்களைத் தவிர்த்து அதற்கு பதிலாக மோர், இளநீர், சர்க்கரை சேர்க்கப்படாத பழச்சாறுகள் அருந்தலாம் என்று தெரிவித்துள்ளது.
ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்ட நபர் …திடீரென வெடித்து சிதறிய Head Phone – நடந்த விபரீதம்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மூக்குக்கு மேல் புகை விடும் சியான் விக்ரமின் டூப் மகள்
பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்