Home » சினிமா » சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வரும் எதிர் நீச்சல் சீரியல் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!!

சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வரும் எதிர் நீச்சல் சீரியல் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!!

 சன் டிவி  விரைவில் முடிவுக்கு வரும் எதிர் நீச்சல் சீரியல் - உண்மையை உடைத்த பிரபல நடிகை!!

சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வரும் எதிர் நீச்சல் சீரியல்: சன் டிவி தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது எதிர் நீச்சல் தான். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் குணசேகரன் கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் மாரிமுத்து. இவர் நடித்த போது டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்த இந்த தொடர் மாரிமுத்து மறைவுக்கு பிறகு சற்று பின் தங்கி உள்ளது. இருப்பினும் இந்த தொடரை நெறய இல்லத்தரசிகள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை முதல் இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் 4 மகன்களின் அம்மாவாக நடித்து வரும் நடிகை சத்யபிரியாவின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரசிகர் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருவது உண்மையா என என்று கமெண்ட் செய்துள்ளார் . அதற்கு அவர் சத்யபிரியா சோகமான ஸ்மைலியை கமெண்ட் செய்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது திருமுருகன் இயக்கும் எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவுக்கு வர போகிறது என்பது உறுதியாகிறது. இதை கேட்ட இல்லத்தரசிகள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வரும் எதிர் நீச்சல் சீரியல் – sun tv ethir neechal serial – top 5 serials

வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்… மீறினால் 25 ஆயிரம் அபராதம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top