தற்போது சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
Kayal Serial:
சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல். பி செல்வம் என்பவர் இயக்கி வரும் இந்த தொடர் இதுவரை 4 வருடங்களை கடந்துள்ளது. இந்த தொடரில் கன்னட சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி மற்றும் ராஜா ராணி சீரியல் நடிகர் சஞ்சீவ் லீடு ரோலில் நடித்து வருகின்றனர்.
சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!
அவர்களுடன் சேர்ந்து பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும், இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, டாப் 3 டிஆர்பியில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த 3 வருடங்களாக மக்கள் அனைவரும் எதிர்பார்த்த கயல் – எழில் திருமணம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் குறித்து தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம்?.., ராயனிடம் இப்படி உண்மையை உளறிவிட்டாரே? என்னய்யா நடக்குது தமிழ் BIGGBOSSல?
அதாவது கயல் தொடர் நான்கு வருடங்களை எட்டியுள்ள நிலையில் இன்று 1000-வது எபிசோட் ஒளிபரப்பாகி உள்ளது. இதன் மூலம் 1000 நாட்கள் கடந்த தொடர் என்ற சாதனையை பெற்றுள்ளது. மேலும் ஆயிரம் ஆவது நாள் எபிசோடை கயல் சீரியல் குழுவினர் தங்களுடைய செட்டில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸில் சாதனை படைத்த ஜாக்குலின்.., BB வரலாற்றில் இதுவே முதல் முறை!!
விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!
விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!