பிரபல சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், தொடரில் நடிக்க ஒரு நடிகை ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.
மூன்று முடிச்சு சீரியல்:
பொதுவாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்கு விஷயமாக இருந்து வருவது தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ தான். குறிப்பாக சீரியல்களுக்கு தான் அதிகம் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதனாலயே, பெண்களை மையப்படுத்திய கதைகள் கொண்ட சீரியல்கள் தான் அதிகம் ஒளிபரப்பாகிறது. அதன்படி, சன் டிவியில் கயல், சுந்தரி, மூன்று முடிச்சு, மருமகள், சிங்கப்பெண்ணே, மலர், சுந்தரி என பெண்களை மையப்படுத்திய கதைகளே அதிகமாக ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் – இவ்வளவு சம்பளம் வாங்கும் நடிகை யாரு தெரியுமா?
இந்த தொலைக்காட்சியில் மட்டுமின்றி, மற்ற சேனல்களிலும் பெண்களை மையமாக கொண்டு தான் சீரியல்கள் புதிது புதிதாக ஒளிபரப்பாகி வருகிறது. எனவே, இப்படி பெண்கள் மையமாக கொண்ட கதைகளில் லீடு ரோலில் பெண்கள் நடிப்பதால், பெண்களுக்கு ஆண்களை தாண்டி அதிக வாய்ப்பு இருந்து வருகிறது. எனவே பெண்களுக்கு சம்பளமும் பெரிய அளவில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சன் டிவியில் மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கான் ஒரு பேட்டியில், சீரியல் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து பேசியுள்ளார்.
தியேட்டரில் ஓடும் போதே OTT-யில் ரிலீசாகும் அமரன் – எப்போது தெரியுமா?
அதில் அவர் பேசியதாவது, ” தற்போது சினிமாவில் நடித்த நடிகைகள் சீரியலில் நடிக்க வந்து விடுகின்றனர். அவர்களுக்கு நன்கு ரீச் இருந்தால், அவர்கள் கேட்கும் சம்பளத்தை நிர்வாகம் கொடுத்து வருகிறது.
ஏன் அந்த நடிகை கேட்டால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கூட கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர் ரூ. 1 லட்சம் சம்பளம் பெறும் நடிகை என கூறுவது அவருடன் சேர்ந்து மூன்று முடிச்சு சீரியல் நடிக்கும் நாயகி சுவாதி கொண்டே-வை தான் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்