மீண்டும் டிஆர்பியை எகிற விட்ட எதிர்நீச்சல்.., முந்தியடிச்சு முன்னுக்கு வந்த சிறகடிக்க ஆசை சீரியல்.., TRP-யில் புதிய மாற்றம்!!மீண்டும் டிஆர்பியை எகிற விட்ட எதிர்நீச்சல்.., முந்தியடிச்சு முன்னுக்கு வந்த சிறகடிக்க ஆசை சீரியல்.., TRP-யில் புதிய மாற்றம்!!

ஒவ்வொரு வார இறுதியிலும் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின்  டிஆர்பியை பற்றி தான். டிஆர்பியில் முதல் இடத்தை பிடிப்பதற்கு ஒவ்வொரு சேனலும் நீ நான் என போட்டி போட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி மக்களை மொத்தமாக கவர வேண்டும் என்று எல்லா சீரியல்களிலும் செம்ம டிவிஸ்ட்களை வைத்து டெலிகாஸ்ட் செய்து வருகின்றனர். அதனால் மக்கள் எந்த சீரியலை பார்ப்பது என்று குழப்பத்திற்கு தள்ளும் படி சீரியல்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக டிஆர்பிக்காக சண்டை போட்டு வரும் சேனல் என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி மட்டும் தான். இந்த சண்டையில் ஜி தமிழ் சேனல் எட்டி கூட பார்ப்பது இல்லை.

அதன்படி டிஆர்பியின் முதல் ஐந்து இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்து வருகிறது. டாப் 5ல் வர விஜய் டிவி சீரியல்கள் முக்கி கொண்டிருக்கிறது. அதே போல் இந்த வாரமும் டாப் 5 இடத்தை விஜய் டிவி கோட்டை விடும் என்று பார்த்தால் அடித்து முன்னுக்கு வந்துள்ளது.  அதன்படி இந்த வாரம் டிஆர்பி லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதுவரை முதல் இடத்தை குத்தகை எடுத்தது போல் சிங்கபெண்ணே சீரியல் முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது அதை பின்னுக்கு தள்ளி எதிர் நீச்சல் சீரியல் மீண்டும் டிஆர்பியில் எகிற தொடங்கியுள்ளது.

TNPSC தேர்வர்களே.., இந்த கேள்வி தெரிஞ்சா போதும்.., குரூப் 4ல் ஈஸியா Pass செய்யலாம் – முழு விவரம் உள்ளே!!

டாப் 5 சீரியல் இதோ

  1. எதிர்நீச்சல்
  2. சிங்கப்பெண்ணே
  3. சிறகடிக்க ஆசை
  4. கயல்
  5. வானத்தை போல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *