
சன் டிவி தொலைக்காட்சியில் புதிதாக டெலிகாஸ்ட்டாக இருக்கும் சீரியலுக்கு தனுஷின் பேமஸ் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் பேமஸ் பட டைட்டிலில் புதிய சீரியல்
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை வெகுவாக கவர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். குறிப்பாக சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான். இந்த சேனலில் காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து வருகின்றனர். தற்போது சன் டிவியின் டிஆர்பியை உச்சத்தில் வைத்திருக்கும் விதமாக எதிர் நீச்சல், சிங்க பெண்ணே உள்ளிட்ட சீரியல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் மேலும் மக்களை கவருவதற்காக இரண்டு சீரியல்களை டெலிகாஸ்ட் செய்ய இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் ஒரு சீரியலுக்கு மல்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொரு சீரியலுக்கு தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பை தான் சீரியலுக்கு வந்துள்ளார்களாம். அதாவது சரி கம பா தயாரிப்பில் நடிகை டெல்னா மற்றும் நடிகர் நடிகை சல்மான் லீடு ரோலில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த தொடரில் விஜே அக்சயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பித்த நிலையில், இந்த தொடருக்கு “ஆடுகளம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.