
Bollywood Cinema: சூப்பர் ஸ்டார் உருவம் பொறித்த தங்க நாணயம்: பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான், பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இந்த இரண்டு படங்களும் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஷாருக்கான். இப்படி இருக்கையில் இவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக பாரீஸில் உள்ள க்ரெவின் மியூசியம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் உருவம் பொறித்த தங்க நாணயம்

அதாவது பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் உருவம் பதித்த ஒரு சிறப்பு தங்க நாணயத்தை தான் க்ரெவின் மியூசியம் வெளியிட்டுள்ளது. ஒரு நடிகரின் உருவத்தை நாணயத்தில் பொறித்தது இதுவே முதல் முறை.
Also Read: மஞ்சும்மல் பாய்ஸ் பட குணா குகையின் VFX காட்சிகள் வெளியீடு – அடேங்கப்பா எப்படி எடுத்துருக்காங்க!!
அந்த பெருமையை ஷாருக்கான் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு பெருமைமிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட்
அருவருக்கத்தக்க படத்தை இயக்கி கைதான 3 இயக்குனர்கள்