
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பாலும், தனக்கென்று ஒரு ஸ்டைலுடன் வந்து இப்பொழுது இவரை பற்றி தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட ரஜினிகாந்த் தான் என்று சொல்லும். 80ஸ் காலகட்டத்தில் தற்போது வரை இந்த பட்டத்தை விட்டு கொடுக்காமல் உச்சத்தில் இருந்து வருகிறார்.

அடேங்கப்பா.., ரங்க வாத்தியாரு மகளா இது? ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே? அழகிய புகைப்படம் இதோ!!
கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 தான். இந்நிலையில் ரஜினிகாந்தின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த போட்டோவில் சூப்பர் ஸ்டார் ஒரு குழந்தையை தூக்கி வைத்துள்ளார். உடனே அந்த குழந்தை அஜித் மனைவி ஷாலினியோ அல்லது நடிகை மீனாவோ என்று நினைக்க வேண்டாம். இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை வேற யாரும் இல்லைங்க.., தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் “கரு கரு கருப்பாயி” பாடலை பாடிய பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் தான். இவரா சின்ன குழந்தையில் இப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் வாயை பிளந்து உள்ளனர்.