சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை பயணம் - 'வேட்டையன்' திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதாக கருத்து !சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை பயணம் - 'வேட்டையன்' திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதாக கருத்து !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை பயணம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றார். இதையடுத்து கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக இமயமலை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை செல்வது வழக்கம் அந்த வகையில் தற்போது சென்னையிலிருந்து இமயமலை புறப்பட்டார்.இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது ஒவ்வொரு ஆண்டும் இமயமலை செல்கிறேன் என்றும், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக புனித தளங்களில் தரிசனம் செய்ய உள்ளேன். அத்துடன் ஆன்மீகப் பயணம் அடிக்கடி சென்று வருவது தனக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும், வேட்டையன்’திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்தார்.

விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா திரைப்பட டிரைலர் நாளை வெளியீடு – படக்குழு அறிவிப்பு !

இதையடுத்து மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என்று சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மன்னிக்கவும் அரசியல் கேள்வி வேண்டாம் வேண்டாம் என்று கூறினார். அதனை தொடர்ந்து இசை பெரியதா அல்லது கவிதை பெரியதா என ஒரு போட்டி தமிழ் சினிமாவில் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் கூறாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *