சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தற்போது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் விஸ்வநாதன் அமர்வானது அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்குகளில் கூட ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே சிறை, இல்லாவிட்டால் பிணை வழங்க வேண்டுமென்ற விதி சட்டவிரோத பரிவர்த்தனை வழக்குகளுக்கு கண்டிப்பாக பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. Prevention of Illegal Money Laundering Act (PMLA)

PMLA பிரிவு 45 பிணை வழங்க 2 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென கூறினாலும், பிணை தொடர்பான உரிமைகளை அது பாதிக்காது என உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் விஸ்வநாதன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெக முதல் மாநில மாநாடு? காவல்துறையை நாடிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!

மேலும் PMLA வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் போது விசாரணை அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட எந்த ஒரு குற்றச்சாட்டையும் சாட்சியமாக ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *