அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம்டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் மதுபான கொள்கை முறைகேட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே முதல்வர் பணிகளை மேற்கொண்டுவந்தார். ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிகளில் கலந்து கொல்வதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உதார்விட்டுள்ளது. மேலும் கெஜ்ரிவாலுக்கு சில நிபந்தனைகள் விதித்து உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் :
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தமது அலுவலகத்திற்கும், தலைமை செயலகத்திற்கும் செல்வதற்கும் தடை.
அத்துடன் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பற்றி பொது வெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி அலுவலகமான ஆம் ஆத்மி கட்சி அலுவலத்திற்கு செல்லக்கூடாது.
மேலும் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான சாட்சிகளை எக்காரணம் கொண்டும் சந்திக்கக்கூடாது.
இடைக்கால ஜாமீன் தொகையாக ரூபாய் 50,000 செலுத்த வேண்டும்.
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி ! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
அரசு அலுவல் சார்ந்த கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது.
போன்ற நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.