தற்போது பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.Supreme Court order
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இடஒதுக்கீடு :
பட்டியலினத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் பஞ்சாப் அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு 2009ம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றியது. இந்த இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு தீர்ப்பு :
அந்த வகையில் பஞ்சாப் அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். அதே சமயம் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார். sc / st internal reservation
இதனையடுத்து 6 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும். பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க கொண்டுவந்த சட்டம் செல்லும்.
மேலும் அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. அந்த வகையில் பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியலின வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கினர்.
தமிழகத்தில் இது தான் முதல் முறை – மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டம் இதுதான்.. அது எப்படி திமிங்கலம்!
இருப்பினும் மாநிலங்கள் அதன் சொந்த விருப்பம் அல்லது அரசியல் தேவைக்காக செயல்பட முடியாது. அத்துடன் மாநிலங்களின் முடிவு நீதித்துறையின் மறுஆய்வுக்கு உட்பட்டது என்றும் கூறினர்.
சமீபத்திய செய்திகள் :
ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா?
யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம்