கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் குறித்து தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
ரெட்ரோ:
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சூர்யா 44. இப்படத்தை சூர்யா ரசிகர்கள் மலைபோல நம்பியுள்ளனர். அதற்கு கரணம் கங்குவா வாங்கிய மிகப்பெரிய அடி தான்.
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!
அவர் நடித்த கடைசி இரண்டு படங்களும் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் சூர்யா 44 படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படம் கண்டிப்பாக ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் ஒரு காதல் படமாக இருக்கும் என்று தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கி இருக்கிறது.
விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!
இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ரெட்ரோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!
தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும் நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!
அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!