கங்குவா படத்தை தொடர்ந்து உருவான சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதி -யை குறித்த படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோலிவுட்டில் டாப் 5ல் ஒரு நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் குறைவான வசூலையே எடுத்தது. இதற்கு முன் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் பிளாப் ஆனது. இப்படி தொடர்ந்து இரண்டு படங்களும் சூர்யாவுக்கு தோல்வியை தழுவியதால், அவர் மார்க்கெட் குறைந்தது.
சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதி -யை குறித்த படக்குழு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
இதனால் தற்போது சூர்யாவை வைத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரெட்ரோ படம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் அந்த படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய கதை.., ஸ்டன்னாகி நின்ற முக்கிய பிரபலம்.., படம் சூப்பர் ஹிட் அடிக்கும்?
அதாவது சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வருகிற மே மாதம் 1ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பேட்டைக்காரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS.., வெளியேறும் போட்டியாளர்!!
தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?
குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ்.., குஷியில் அஜித் ரசிகர்கள்!!
மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை.. அது யார் தெரியுமா?
ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!