"வாடிவாசல்" படத்தில் இருந்து ஜகா வாங்கிய சூர்யா?., அவருக்கு பதில் நடிக்கும் வெற்றிமாறனின் பேவரைட் ஹீரோ? .., வெளியான ஷாக்கிங் தகவல்!!"வாடிவாசல்" படத்தில் இருந்து ஜகா வாங்கிய சூர்யா?., அவருக்கு பதில் நடிக்கும் வெற்றிமாறனின் பேவரைட் ஹீரோ? .., வெளியான ஷாக்கிங் தகவல்!!

தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் வெற்றி மாறன். அவர் பெயரில் வெற்றி இருப்பதால் என்னவோ தெரியவில்லை, அவர் படைப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது விடுதலை பார்ட் 2 படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற திரைப்படம் என்றால் அது சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” திரைப்படம் தான். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் நாட்கள் நடைபெற்ற நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் இப்படத்தை குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக  தனுஷ் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சூர்யா மற்ற படங்களில் பிசியாக நடித்து வருவதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது . ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னது.., 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணியா? நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *