மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை: இன்றைய சூழ்நிலையில் வாழும் பெரும்பாலான குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை போனில் மூழ்கி வருகின்றனர். இதனால் சில ஆபத்துகள் நேரிடும் என்று தெரிந்தும் கூட சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை
அதாவது, 15 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் செல்போன் மற்றும் டிவி போன்றவைகளை பார்க்க கூடாது என்றும் அதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
செல்போன் மற்றும் தொலைக்காட்சிகளை அதிக நேரம் பார்ப்பதால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
இதனால் தான் ஸ்வீடன் நாட்டு அரசு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை செல்போனில் இருந்து தள்ளி வைக்க வேண்டும்.
குழந்தைகளை செல்போனில் பார்க்க அனுமதிக்க கூடாது. 2 முதல் 5 வயது உடைய குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வேண்டும் என்றால் செல்போன் மற்றும் டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும். sweden government
Also Read: கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு .. ஆர் ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது..!
6 முதல் 12 வயது உடைய குழந்தைகள் 1 நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் பார்க்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
அதே போல் 13 முதல் 18 வயது உடையவர்கள் 1 நாளைக்கு 2 மணி முதல் 3 மணி நேரம் மட்டுமே போன் or தொலைக்காட்சியை பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை