ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்யும் SWIGGY. பிரபல உணவு டெலிவரி நிறுவனமான “ஸ்விக்கி” தனது நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 400 ஊழியர்களை திடீர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி செய்யும் ஒரு மிக பெரிய நிறுவனம் ஸ்விக்கி ஆகும். இது கடந்த 2009 ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தொடங்கபட்ட நாள் முதல் தற்போது வரை இந்தியா முழுவதும் 500 கும் அதிகமான நகரங்களில் தங்களது டெலிவரி சேவையை செய்து வருகிறது.
வீடு வாங்கினால்., குத்துவிளக்கு ஏற்ற மனைவி இலவசம்.., சர்ச்சையை கிளப்பிய பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் – அரசு எடுத்த அதிரடி முடிவு!!
இந்த ஆன்லைன் டெலிவரி தளத்தில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். வேலைக்கு செல்வோர், வயதானவர்கள் போன்ற பலருக்கு இந்த ஆன்லைன் சேவை மிக உதவியாக உள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் 6000 கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்யும் SWIGGY
தற்போது இந்த நிறுவனத்தில் சுமார் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தில் ஏற்படும் அதிக செலவுகளை குறைப்பதற்காக தான் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.