T20 தொடரில் இந்தோனேசியா வீராங்கனை ரோமாலியா சாதனை. மங்கோலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆறு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறார்கள். இந்த தொடரில் முதல் 4 போட்டிகளிலும் இந்தோனேசியா அணி வெற்றி பெற்றது.
T20 தொடரில் இந்தோனேசியா வீராங்கனை ரோமாலியா சாதனை
தொடர்ந்து வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்ற முனைப்பில் இந்தோனேசிய மகளிர் அணி களம் இறங்கியது. இதை தொடர்ந்து டாஸ் வென்ற இந்தோனேசிய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 120 பந்துகளில் 152 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மங்கோலிய கிரிக்கெட் அணி.
கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு ! வேலியே பயிரை மேய்வது போல அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் செய்த பலே காரியம் !
ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை 50 ரன்களுக்குள் ஆள் அவுட் ஆவார்கள் என்று. இதில் ரோமாலியா மிக அபாரமாக பந்து வீசி ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார். இதன் அடிப்படையில் T20 வரலாற்றில், பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு வகையிலும் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் பெருமையை ரோமாலியா படைத்துள்ளார். இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.