T20 world cup 2024: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்: ஐபிஎல் சீசன் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், ஜூன் 1ம் முதல் T20 உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இலங்கை மற்றும் வங்காளதேசம் நேருக்கு நேர் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பெரிய ரன்களை இலக்காக வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மைதானத்தில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவருக்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எனவே 120 பந்துகளில் 125 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வங்காளதேசம் அணி களத்தில் இறங்கியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
பந்துக்கு ஒரு ரன்கள் அடித்தால் கூட வெற்றி பெற்று விடலாம் என்ற நோக்கத்தில் வங்காளதேச வீரர்கள் இருந்த நிலையில், இலங்கை வீரர்களின் பந்தை சமாளிக்க முடியாமல் சற்று திணறினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். லிட்டோஸ் தாஸ் மற்றும் தவ்ஹீத் ஹார்டோய் பார்ட்னெர்ஷிப் வெற்றிக்கு வழிவகுத்தது. இவர்கள் இருவரும் 11.4 ஓவரில் 91 ரன்கள் சேர்த்தனர். அடுத்து இரண்டு பேரும் 99 ரன்களில் அவுட்டாக, அடுத்தடுத்து இறங்கியவர்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை எதிரணிக்கு பரிசளித்து வந்தனர். மொத்தம் 8 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ரன் 113 ஆக இருந்தது. கடைசியாக 2 விக்கெட் மிச்சம் இருந்த நிலையில் மெஹ்முதுல்லா 16 ரன்கள் குவித்து 19 ஓவரில் ஆட்டத்தை முடித்தார். ஈசியாக ஜெய்க்குற மேட்சை சற்று பிரேசரை ஏற்றி வங்காளதேசம் திகில் வெற்றி அடைந்தது. T20 world cup 2024: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம் – T20 worldcup 2024 – T20 உலக கோப்பை 2024 – INDIA Team-SRI LANKA Team- Bangladesh Team
பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரம் கன்பார்ம்.. அடித்த சூப்பர் ஜாக்பாட்… எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்
கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்
தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனம் பறிமுதல்