T20 உலக கோப்பை இறுதி போட்டியில் கோலி இல்லையா: T20 உலகக்கோப்பை1 தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்றுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்று சவுத் ஆப்பிரிக்கா பைனலுக்கு முதல் அணியாக சென்றுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று இரவு நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து இங்கிலாந்து அணி விளையாடியது.
T20 உலக கோப்பை இறுதி போட்டியில் கோலி இல்லையா?
இதில் இந்திய அசுர வெற்றி அடைந்து தற்போது பைனலுக்கும் சென்று விட்டது. அதன்படி நாளை நடக்க இருக்கும் Final போட்டியில் இந்திய அணி மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணி எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் நாளை நடக்க இருக்கும் பைனலில் விளையாட போவதில்லை என்பதாக சோசியல் மீடியாவில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடப்பாண்டு முதல் ரோஹித் சர்மாவுடன் ஓப்பனராக இறங்கி வருகிறார் கிங் விராட் கோலி.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆனால் T 20 உலக கோப்பை தொடங்கியதில் இருந்து அவர் அதிகமாக டக் அவுட் ஆகி உள்ளார். மேலும் அவர் பார்மில் இல்லை என்று அவருடைய ரசிகர்கள் கூட கூறி வருகின்றனர். ஏன் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் கூட அவர் ஒரே ஒரு சிக்ஸர் அடித்து அவுட்டாகி வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை களமிறக்க வேண்டும் என்று பலரும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
Also Read: Semi final 2 : இந்தியா vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை – மழை பெய்தால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்?
இந்நிலையில் இது குறித்து நேற்று சூசகமாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். அதாவது விராட் தனது சிறப்பான ஆட்டத்தை இன்னும் சேமித்து வைத்திருக்கிறார் என்று கூறி அணியில் மாற்றம் இருக்காது என்பது சூசகமாக தெரிவித்து சென்றுள்ளார். இதனால் கண்டிப்பாக விராட் விளையாடுவர் என தெரிகிறது. இதனால் அவருடைய வீரர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
கிரிக்கெட் ரசிகரா நீங்கள் அப்ப இந்த நியூஸா பார்க்கமா விட்டுராதீங்க தல!!
சூப்பர் 8 சுற்றில் செம்ம ட்விஸ்ட்
T20-ல் புதிய சாதனை படைத்த ரஷித் கான்
2024 T20 உலக கோப்பை பிராண்ட் தூதராக தடகள வீரர்
↩︎t20 world cup 2024 latest news