T20 உலக கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் செம்ம ட்விஸ்ட் - இந்தியாவுக்கு  அடுத்தடுத்த போட்டிகளில் ஆப்பு கன்பார்ம்!T20 உலக கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் செம்ம ட்விஸ்ட் - இந்தியாவுக்கு  அடுத்தடுத்த போட்டிகளில் ஆப்பு கன்பார்ம்!

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த T20 உலக கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் செம்ம ட்விஸ்ட்: ஐபிஎல்1 போட்டியை தொடர்ந்து T20 உலக கோப்பை2 ஜூன் 2ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் உள்ள 4 மைதானங்களில் நடைபெற இருக்கிறது. அதன்படி பார்போடோஸ் என்ற மைதானத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெற உள்ள நிலையில் அங்கு  40 முதல் 55 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி செயின்ட் லூசியா மைதானத்தில் இந்தியா விளையாடும் அடுத்த போட்டியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

T20 உலக கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் செம்ம ட்விஸ்ட்

அதே போல ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா – வங்கதேச போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் முன்னரே அறிவித்தது. எனவே சூப்பர் 8 சுற்று போட்டிகளில் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் நிலையில், போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்படும். இதனால் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை முக்கிய அணிகள் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்” – CMDA டெண்டர் வெளியீடு

  1. IPL 2024 Points Tabel ↩︎
  2. T20 World Cup 2024 latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *