பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய அமெரிக்கா. என்னதான் வல்லரசு நாடாக இருந்தாலும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கத்துக்குட்டி அணிதான்.இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. ஆனால் இன்று பவுலிங் மிரட்டி விட்டது. ஆம் நாங்கள் காத்துக்கொடுக்கும் அணி என்பது போல் பந்து வீச்சில் நொறுக்கியது.
பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய அமெரிக்கா
பாகிஸ்தானி சற்று நீதான ஆட்டத்தையே கடைப்பிடித்தது. 1.2 ஓவர்களில் முகமது ரிஸ்வான் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். உஸ்மான் கான் மூன்று ரன்களுக்கு நிலைக்கவில்லை. பின்னர் வந்த ஜமாத் 11 ரன்களில் வீழ்ந்தார். 4.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 26 ரன்கள் எடுத்தது. ஆனால் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. பாபர் அசாம் மற்றும் சதாப்கான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 72 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக கொடுத்தனர்.
அணியின் ஸ்கோர் 98 ஆக இருந்தபோது சதாப்கான் வீழ்ந்தார். அடுத்து வந்த ஆஸம் கான் கோல்டன் டக் ஆனார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் பாபர் அசாம் நிலைத்து ஆடினார். 15.5 ஓவர்களில் 125 ரன்கள் இருந்த போது பாபர் அசாம் அவுட் ஆனார். அதன் அடுத்த ஓவரிலேயே சதாப்கான் 40 ரன்களுக்கு வெளியேறினார். கடைசி கட்டத்தில் அப்ரிடி இன் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் 150 ரன்கள் கடந்தது. நினைக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டும் எடுத்தது.
19-வது ஓவர் சுவாரசியம் :
அந்த ஓவரில் அப்ரிடி ஒரு மெகா சிக்ஸர் அடித்தார். அப்போது ரசிகர் ஒருவர் பந்தை எடுத்துக் கொண்டார். சிறிது நேரம் பந்தை கொடுக்காமல் அவரே வைத்துக் கொண்டார். இதனால் சற்று நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
20-வது ஓவர் சுவாரசியம் :
இந்த ஓவரின் இரண்டாவதாக வீசிய பந்து நேராக கீப்பர் கைக்கு சென்றது. கீப்பர் பௌலருக்கு பந்தை த்ரோவ் செய்தார். பவுலர் அதை கவனிக்காததால் பந்து நேராக சென்றது. இதை பயன்படுத்திய அப்ரிடி இரண்டு ரன்களை ஓடி எடுத்தார். இந்த ரன்கள் நடுவார்களால் மறுக்கப்பட்டது. இதனால் அப்ரிடி ஓடிய ரெண்டு ரன்கள் வழங்கப்படவில்லை. 160 ரன்கள் இலக்காக கொண்டு அமெரிக்கா ஆடியது.
நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு 2024.., தேர்வு தேதிக்கான அறிவிப்பு வெளியீடு… உடனே விண்ணப்பியுங்கள்!
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அமெரிக்கா நிதான ஆட்டத்தை கடைபிடித்தது. தொடக்க ஆட்டக்காரர் டைலர் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் கௌஸ் களம் இறங்கினார் . இருவரும் நிதானமாக ஆடினாலும் அவ்வப்போது தவறான பந்தை எல்லை கோட்டிற்கு அனுப்பினர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் தினரினர். இவர்களின் கூட்டான்மை 50 ரன்களுக்கு மேல் கடந்து சிறப்பாக இருந்தது.
ஆறு பவுலர்களை பயன்படுத்தியும் இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை. 12.2 அவர்களின் அமெரிக்க அணி 100 ரன்களை கடந்தது. அத்துடன் அதன் கேப்டன் அரை சதமும் கடந்தார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க அணி வெற்றியை நோக்கி நகர்ந்தது. அணியின் ஸ்கோர் 104ஆக இருந்த போது கவுஸ் அவுட் ஆனார். 26 பந்துகளை சந்தித்த அவர் 35 ரன்கள் எடுத்தார். ஆனால் அந்த சந்தோசம் சற்று நேரம் கூட நிலைக்கவில்லை. அதே 50 ரன் இல் கேப்டன் அவுட் ஆனார்.
இதனால் பரபரப்பு தொற்றியது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 28 ரன் தேவைப்பட்டது. 18வது ஓவரில் 7 ரன்கள் மட்டும் அடித்தனர். 19வது ஓவரில் 7 ரன்கள் மட்டும் எடுத்தனர். இதனால் கடைசி 6 பந்துகளில் 15 ரன்கள் என்று மாறியது. முதல் 3 பந்தில் 1 ரன்கள் வீதம் எடுக்கப்பட்டது. 5 வது பந்தில் சிக்ஸர் அடித்தனர். கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. அதனால் சூப்பர் ஓவர் சென்றது.
சூப்பர் ஓவர் :
காமெடி ஓவராக போட்ட பாகிஸ்தான். ஒரே ஓவரில் பல அகல பந்துகளை வீசியது. அதனால் அமெரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 6 பந்துகளில் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது. உலக கோப்பை 2024இல் பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.