
T20 உலக கோப்பை – பிராண்ட் தூதராக தடகள வீரர் உசைன் போல்ட் தேர்வு: தற்போது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் போட்டி என்றால் ஐசிசி T20 உலக கோப்பை தொடர் தான். அதன்படி இந்த தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடர் முழுவதும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதாவது, நடக்க இருக்கும் 2024 ஆண்டுக்கான T20 உலக கோப்பை தொடரின் பிராண்ட் தூதராக பிரபல தடகள வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல்வேறு சோசியல் மீடியாவில் வரும் விளம்பரங்களில் அவருடைய முகம் தான் இடம் பெற போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற T20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி கோப்பையை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.