T20 world cup Final 2024: இந்தியா VS சவுத் ஆப்பிரிக்கா இன்று பலபரிச்சை! உலக கோப்பை மகுடம் யாருக்கு?T20 world cup Final 2024: இந்தியா VS சவுத் ஆப்பிரிக்கா இன்று பலபரிச்சை! உலக கோப்பை மகுடம் யாருக்கு?

T20 world cup Final 2024: இந்தியா VS சவுத் ஆப்பிரிக்கா இன்று பலபரிச்சை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த நான்கு வாரங்களாக களைகட்டி வருகிறது என்றே சொல்லலாம். 20 அணிகள் களமிறங்கிய இந்த ஆட்டத்தில் தற்போது இன்று கிளைமாக்ஸில் வந்து நிற்கிறது. எனவே இன்று இந்திய அணி மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணி நேருக்கு நேர் மோத இருக்கிறது.

இந்த இரண்டு அணிகளிலும் நடப்பாண்டில் நடந்த உலக கோப்பை போட்டியில் எந்த மேட்ச்சிலும் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று போட்டி நடைபெறும் இடமான பார்படாஸ் மைதானம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் சாதகமாக இருக்கிறது.

  • ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி பேட்டிங்கில் வலுவாக இருக்கிறது.
  • ஓப்பனராக இறங்கும் கோலி கொஞ்சம் சொதப்பினாலும் அடுத்து வரும் ஆட்ட நாயகர்கள் போட்டியை நன்றாக கொண்டு செல்கின்றனர்.
  • மேலும் கோலி இந்த பைனல் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார்.
  • இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ரோஹித் கேப்டன்சி சிறப்பாக இருந்து வருகிறது. மேலும் பவுலிங்கில் பும்ரா தனது அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
  • அவர் மட்டுமின்றி அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் செம்ம பார்மில் இருந்து வருகின்றனர்.

Also Read: டெஸ்ட் கிரிக்கெட்டில் புது வரலாறு படைத்த ஷஃபாலி வர்மா – என்னனு தெரியுமா?

  • தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை  டி காக், எய்டன் மார்க்ரம், ரீசா ஹென்ரிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் என அதிரடி ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர்.
  • அதுமட்டுமின்றி பவுலிங்கில் ரபாடா, நார்க்யா, யான்சென் அடுத்தடுத்து வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
  • குறிப்பாக ஷம்சி போடும் சூழல் பந்து அணிக்கு மேலும் வலு சேர்க்கிறது. மேலும் இதுவரை இந்த இரண்டு அணிகளும் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
  • இதில் இந்தியா நான்கு முறையும், சவுத் ஆப்பிரிக்கா மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளது.
  • T20 World cup 2024 பைனல் போட்டி இன்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும்  நிலையில் அங்கு 80 விழுக்காடு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
  • மழையால் ஆட்டம் தடை பட்டாலும், ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளதால், நாளை போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *