டி20 உலகக் கோப்பை ஓமன் vs நமீபியா போட்டி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் 21 ரன்கள் குவித்து நமீபியா அணி சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை ஓமன் vs நமீபியா போட்டி
JOIN WHATSAPP TO GET SPORTS NEWS
டி20 உலகக் கோப்பை :
T20 உலகக் கோப்பை தொடரானது ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, உள்பட 20 அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஓமன் vs நமீபியா :
இன்று நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஹெர்கார்டு எராஸ்மஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
அந்த வகையில் ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்து 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஓமன் அணியில் அதிகபட்சமாக காலிட் கைல் 34 ரன்கள் எடுத்தார்.
போட்டி டிராவானது :
அதன் பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த நமீபியா அணியில் மைக்கேல் வான் லிங்கன் 0 ரன்னில் வெளியேற, நிக்கோலஸ் டேவின் மட்டும் 24 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து அடுத்து வந்த கேப்டன் எராஸ்மஸ் 13 ரன்களில் வெளியேறினார். ஜே ஜே ஸ்மித் 8 ரன்கள் , ஜான் க்ரீன் 0 என்று வரிசையாக ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்படி கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது , கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ஜான் ஃப்ரைலிங்க் 45 ரன்களில் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
மேலும் 3 வது பந்தில் கிரீன் ஆட்டமிழந்தார். 4 வது பந்தில் ஒரு ரன்னும், 5ஆவது பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது.
கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆனால் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்படவே போட்டியானது டிராவில் முடிந்தது.
இந்திய வீரர் கேதர் ஜாதவ் எல்லா கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – ரசிகர்கள் ஷாக்!!
டி20 உலகக் கோப்பை சாதனை படைத்த நமீபியா :
டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது.
அதன் பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியானது சூப்பர் ஓவரில் 21 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் ஓவரில் அதிக ரன்களை எடுத்த அணி என்ற சாதனையை நமீபியா அணி படைத்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான போட்டியில் 19 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்த சாதனையை நமீபியா அணி முறியடித்துள்ளது.