தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சினிமா விமர்சனங்களுக்கு படம் வெளிவந்த 3 நாட்களுக்கு வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கு இன்று விசரணைக்கு வந்துள்ளது.
சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் அதிரடி முடிவு – குஷியில் Youtubers!
தமிழ் சினிமாவில் கடந்த மாதம் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வெளியானது. ஆனால் தியேட்டர்களில் முதல் ஷோ முடிந்து வெளிவந்த ரசிகர்களின் விமர்சனங்களாலும், ஊடகங்களின் வந்த விமர்சனங்களாலும் படம் படு பிளாப் ஆனது. இதனால் அந்த படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இது குறித்து, தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை யூடியூப் சேனல்கள் எடுப்பதை தடுக்க வேண்டும் என்றும், விமர்சனங்கள் கூற கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதே கருத்தை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் வலியுறுத்தி இருந்தது. எனவே இதன் காரணமாக தியேட்டர்களில் யூடியூப் சேனல்கள் Review எடுக்கும் போது ரசிகர்களின் மோசமான கருத்துக்களை கூறி வருவதால், அவர்களை தியேட்டர்காரர்கள் அனுமதிக்கவில்லை. அதனால், கடந்த 2 வாரங்களாக தியேட்டர்களின் வெளியே வீடியோ எடுத்து வருகின்றனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்? … ரசிகர்களுக்கு காத்திருக்கும் Mass ட்ரீட்!
இதில், திரைப்பட விமர்சனங்களை யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வெளியிட மூன்று நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், திரைப்படம் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனம் முன் வைக்க கூடாது என்று திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூறிய நிலத்தில் அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கருத்து சொல்வது மக்களின் சுதந்திரம். இதற்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்