தமிழகத்தில் கடந்த வாரம் ஆளுநர் முன்னிலையில் சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், அமைச்சர்கள் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் முன் வைக்க தொடங்கி விட்டனர். அந்த வகையில் இன்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதன் முதலாக தாக்கல் செய்ய தொடங்கி உள்ளார். அதாவது செய்த முதல் பட்ஜெட் தாக்கலில், சமூக நீதி, தமிழர் பண்பாடும், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய்த் தமிழ், கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம் உள்ளிட்ட ஏழு அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக பட்ஜெட் 2024- 2025
பட்ஜெட் 2024-2025
தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் குறிப்பிட்ட இடங்களில் அமைக்க சுமார் ரூ.111 கோடி ஒதுக்கீடு.
அதே போல் கோயம்புத்தூரில் 20 லட்சம் சதுர அடியில் அமைக்க இருக்கும் தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT PARK) விற்கு ரூ.1,100 கோடி ஒதுக்கீடு.
10,000 மகளிர் சுய உதவிக்குழு
நடப்பாண்டில் கூடுதலாக 10,000 மகளிர் சுய உதவிக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த
தமிழ்நாட்டில் பயின்று வரும் பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு
அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை வெளிநாடுகளில் சென்று படிக்க அவர்களுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு பள்ளி மாணவ – மாணவிகளின் கல்வி திறனுக்காக கிட்டத்தட்ட 435 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
அதே போல் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை அதிகப்படுத்த ரூ.3,014 கோடியும், கலை, அறிவியல் பொறியியல் கல்லூரிகளின் தரம் மேம்படுத்த ரூ. 200 கோடியும் ஒதுக்கீடு.
3 ஆம் பாலினத்தவர்கள் உயர்கல்வி
தமிழகத்தில் இருக்கும் 3ம் பாலினத்தவர்களுக்கு உயர் கல்வி படிப்புக்கு பயில விரும்பும் மாணவர்களின் கல்விக்கான அனைத்து செலவையும் அரசே ஏற்று கொள்ளும்.
தற்போது நடைமுறையில் இருந்து வரும் தமிழக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ. 13,720 கோடி ஒதுக்கீடு.
அதே போல் மகளிருக்கு பெரிதும் பயனாக இருந்து வரும் இலவச பேருந்திற்காக சுமார் ரூ. 3050 கோடி ஒதுக்கீடு.
காலை உணவு திட்டம் மேலும் விரிவாக்கம்
தற்போது நடைமுறையில் இருக்கும் காலை உணவு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் இதை விரிவுபடுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோழி விடுதி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களான சென்னை, மதுரை, கோவை பகுதிகளில் தோழி விடுதிகள் அமைக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு.
அகழாய்வு பணி
கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க ரூ. 17 கோடியும், கீழடி உள்ளிட்ட 8 பகுதிகளில் அகழாய்வு பணி மேற்கொள்ள ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொழி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிதி
மொழித் தொழில்நுட்பம் புது தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி உதவியாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கி, உலகின் தலைசிறந்த 100 நூல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் இடம் பெற வழிவகை செய்வதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கி தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர்களுக்கிடையே நடந்த பயங்கர தாக்குதல்.., அனாமத்தா பறிப்போன பல உயிர்கள்.., பிரதமர் உருக்கம்!!
புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்துதல்
தமிழகத்தில் தற்போது வழக்கத்தில் இருக்கும் புதுமைப்பெண் திட்டம் அரசு பள்ளிகளில் மேலும் விரிவுபடுத்தப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்ற நிலையில் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதுவே அவரின் முதல் பட்ஜெட் தாக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.