Home » செய்திகள் » தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து – துணை வேந்தர் அறிவிப்பு !

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து – துணை வேந்தர் அறிவிப்பு !

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து - துணை வேந்தர் அறிவிப்பு !

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்புக் கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன. அந்த வகையில் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதுகலை படிப்புகளுக்கு மொத்தம் 2,330 மாணவர்களும், முனைவர் பட்டப்படிப்புகளுக்கு 350 பேரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். அத்துடன் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஜூன் 23ஆம் தேதி முதுநிலை நுழைவுத் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற முதுநிலை நுழைவுத் தேர்வில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர்,ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், அசாம், தெலுங்கானா, புதுச்சேரி, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா, ராஜஸ்தான் என பல மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் 2024 – 2025ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தேர்வு எழுதிய மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி நேரத்தில் மாற்றம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இதனை தொடந்து விரைவில் மறுதேர்வுக்கான தேதி குறித்து 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட நுழைவுத்தேர்வுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top