School Holiday: தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது.
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
அதுமட்டுமின்றி தற்போது பள்ளிகள் மும்முரமாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்பு குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனை தொடர்ந்து மாணவர்களின் வேதனையை முன்வைத்து மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்திடம் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Also Read: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: ஒப்புதல் அளித்த கவர்னர் ஆர்.என். ரவி!!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சனிக்கிழமை விடுமுறை இல்லை என்று அறிவித்திருந்த நிலையில், இதனால் மாணவர்கள் சற்று கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்த நிலையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் நாளை மாதத்தின் 2-ஆம் சனிக்கிழமை என்பதன் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி
நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்
புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை