தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது: தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி தமிழக சட்டசபை கூட்டம் கூடியது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 24ம் தேதி முதல் சட்டசபை கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதன்படி அன்று முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். அதற்கு முன்னதாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டசபை கூட்டத்தில் போதைப்பொருள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என அனைத்தையும் எதிர் கட்சியினர் விவாதம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சட்டசபை கூட்டம் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது – lok sabha election 2024 – indian election 2024 – dmk party – stalin news – tamilnadu news
நாளையுடன் “எதிர் நீச்சல்” சீரியலுக்கு சுபம் போட்ட இயக்குனர்? என்ன காரணம் தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனம் பறிமுதல்