BJP Party Leader: தமிழக பாஜகவின் புதிய தலைவர்: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் அவர் சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டனுக்கு போக போகிறார்.
தமிழக பாஜகவின் புதிய தலைவர்
எனவே அவர் படிக்க சென்று விட்டால் அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி அண்ணாமலை திரும்பி வர 6 மாதங்கள் ஆகும் என கூறப்படும் நிலையில், அந்த காலத்தில் கட்சி பணியை பார்க்க போவது யார்? என்பது குறித்து விவாதிக்க தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் டெல்லி செல்கிறார். bjp party symbol
இந்நிலையில் இது குறித்து சூப்பர் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அண்ணாமலை படிக்க சென்றால், புதிய தலைவராக நியமிக்க முடிவு செய்தால் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரில் ஒருவரை நியமிக்கலாம் என்று கூறப்படுகிறது. bjp logo
Also Read: RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் – 58 வருட தடையை உடைத்த மத்திய அரசு!!
அதே போல் இதற்கு முன்னதாக மத்திய மந்திரி எல். முருகன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய மத்திய மந்திரி ஆன போது அவர் பதவி 8 மாதம் இல்லாமல் தான் இருந்தது. எனவே அதேபோல் இப்பொழுதும் அப்படியே விட்டு விட அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. annamalai bjp
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா
தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது?
சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல்