விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை. விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து யாரும் கேட்கவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை :
தற்போது நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் மற்றும் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டுள்ளார் என்றும், தோல்வியை முழு மனதாக ஏற்றுக்கொண்டு மறு வாக்கு எண்ணிகைக்கு விண்ணப்பிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து :
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்துக்கு பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விருதுநகர் மக்களவை தொகுதி தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை என்றும், அவ்வாறு வேட்பாளர்களுக்கு சந்தேகம் இருந்தால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
சீன விசா முறைகேடு வழக்கு – கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு !
மேலும் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடுவதே முறை என்றும் அத்துடன் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும். அந்தவகையில் தேர்தல் நடைபெற்று 45 நாட்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.