தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024

பள்ளி மாணவர்களே தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024 நடப்பாண்டில் வருகிற ஜூலை 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு 11ன் வகுப்பில் படித்து வரும் மாணவர்கள் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள்.

எனவே இந்த தேர்வுக்காக பள்ளி மாணவர்கள் கடந்த  ஜூன் 11ம் தேதி முதல் (இன்று)ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடையும் நிலையில், தற்போது அடுத்த மாதம் ஜூலை 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு… இனி புஷ்பா ஆட்டத்தை பார்க்க முடியாதா?

மேலும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்வின் மூலம்  தேர்ச்சி பெறும் 1000 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் ₹10 ஆயிரம் வீதம் ( ஒரு கல்வி ஆண்டில் 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

Join WhatsApp Group

மேலும் இந்த தேர்வு 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்கள் கீழ் இரண்டு தாள் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற வெப் சைட்டில் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி தேர்வு கட்டணமாக ரூ 50 யை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *