பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரம் கன்பார்ம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வருகிற ஜூலை 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் தற்போது 11ம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் தங்கள் தேர்வு விண்ணப்பங்களை வருகிற ஜூன் 11 முதல் 26 வரை www.dge.tn.gov.in என்ற வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சேர்த்து ரூபாய் 50 ஜூன் 26ம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஜூலை 21ல் நடக்க இருக்கும் திறனாய்வு தேர்வில் கிட்டத்தட்ட 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் 1000 ரூபாய் வீதம் ஒரு கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொகை இளங்கலை படிப்பை முடிக்கும் வரை வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. tamilnadu cm stalin news – education department – schools news – tn school students
ரெட் கார்டு வாங்கிய வெங்கட் பிரபு பட நடிகை… பிரபல நடிகருடன் தகாத உறவு?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்
கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்
தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனம் பறிமுதல்