தற்போது வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவ பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வயநாடு நிலச்சரிவு :
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலச்சரிவு சிக்கி 63க்கும் மேற்ப்பட்ட நபர்கள் பலியானதாகவும், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5 கோடி நிதியுதவி :
கேரள வயநாட்டில் ஏற்ப்பட்ட நிலச்சரிவு நிவாரண பணிக்காக தமிழ்நாடு அரசு பொது நிவாரண நிதியிலிருந்து கேரளாவுக்கு தமிழகம் சார்பில் 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை உயர்வு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு !
பேரிடர் மேலாண்மைக்குழு :
மேலும் மீட்பு பணிகளுக்கு உதவ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சமீரன், ஜானி டாம் வர்கிஸ் ஆகியோர் தலைமையில் மீட்பு குழு கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இணை இயக்குனர் தலைமையில் 20 மாநில பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்ல உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.