தற்போது பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு, தமிழகத்திற்கான வரி நிலுவைகள் மற்றும் கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்திக்க நேற்று மாலை 5 மணியளவில் விமானம் வழியாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். Tamil Nadu Chief Minister M. K. Stalin meeting with Prime Minister Modi today
அந்த வகையில் டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி வழங்க கோரிக்கை :
அந்த வகையில் பிரதமர் சந்திப்பின் போது சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு – TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு !
அத்துடன் தமிழகத்திற்கான வரி நிலுவைகள் மற்றும் கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள் :
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை
பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை