முதல்வர் செய்த காரியம்
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களிடம் ஓட்டு சேர்க்க நேரடியாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். இன்று காலை நடை பயிற்சிக்கு செல்லும் வழியில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தவாறு சென்றார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது முதல்வர் காய்கறி மார்கெட்டுக்குள் சென்ற போது, ஒரு மூதாட்டி ஓடி வந்து தேம்பி தேம்பி அழுதுள்ளார். அதாவது காய்கறி வாங்குவதற்காக 1500 ரூபாய் கொண்டு வந்த நிலையில், தற்போது அதை காணவில்லை என்று கண்ணீர் விட்டபடி கேட்டுள்ளார். உடனே அந்த மூதாட்டியை அழுகாதீர்கள் என்று முதல்வர் மற்றும் அருகிலிருந்த கனிமொழி என இருவரும் ஆறுதல் படுத்தினார். இதையடுத்து, திமுக சார்பில் அந்த மூதாட்டிக்கு 2,000 ரூபாய் பணம் உடனடியாக வழங்கப்பட்டது. அதற்கு மூதாட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.