தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம் - காணொளி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம் - காணொளி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்: தமிழகத்தில் இப்பொழுது 21 மாநகராட்சிகள் இருந்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிதாக 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக பிரித்து தொடங்கி வைத்தார். அதாவது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மக்கள் தொகை அடிப்படையில் தான் தரம் உயர்த்தப்படும்.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. எனவே இப்படி தரம் உயர்த்த படுவதன் மூலம் அப்பகுதியில் கொண்டு வர இருக்கும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும். municipal corporations inagurate

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்

அதன்படி தமிழகத்தின் முக்கிய மாவட்டங்ககளான காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளை தற்போது மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று அந்தந்த நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. tamil nadu cm stalin

Also Read: தேசிய பறவை மயில் கறி சமைத்த யூடியூபர் – காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இது குறித்து ஆளுநர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்  அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி இந்த நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *