
தமிழ்நாட்டிற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நிகழ்வை தமிழ்நாடு நாள் விழா 2024 என்று ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
தமிழ்நாடு நாள் விழா 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாடு நாள் விழா :
தமிழ்நாட்டிற்கு முன்னாள் முதல்வரும் திமுகவை உருவாக்கியவருமான பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தினமானது ஜூலை 18 ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பின் படி 2022ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் :
அந்த வகையில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள், ஓவியப்போட்டி, நடனப்போட்டி போன்றவைகள் நடத்தப்பட உள்ளன.
மேலும் இதில் முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு,
ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட உள்ளது.
அந்த வகையில் சென்னையில் மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி வரும் 09.07.2024 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை விவரம் :
மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு தொகையாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் ரூபாயும் மற்றும்
இதனை தொடர்ந்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்படுவார்கள் எனத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் சார்பில் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி – களைகட்டும் வாக்குப்பதிவு!!
கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்பு :
ஆட்சிமொழி தமிழ்,
பேச்சு போட்டிகளுக்கான தலைப்பு :
குமரி தந்தை மார்சல் நேசமணி,
தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா,
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி