சட்ட கல்லூரியில் சேர வேண்டுமா? தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மேல் படிப்பிற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சட்ட கல்லூரியில் படிக்க மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 மாவட்டங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அங்கு சேருவதற்கு மாணவர்கள் http://tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.
மேலும் மே 31ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து உங்களின் விண்ணப்பங்களை சரிபார்த்த தகுதியுள்ள மாணவர்களுக்கு MAIL மூலமாக தான் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்பு கொள்வார்கள். மின் அஞ்சலில் தகவல் வந்த பிறகு மாணவர்கள் அவர்கள் கொடுத்த டைமுக்குள் Reply செய்ய வேண்டும். அது எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!
- டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திடம் இருந்து மின் அஞ்சல் வந்த பிறகு மாணவர்கள் lawadmissionenquirygovt@gmail.com என்ற mail id க்கு தான் replay செய்ய வேண்டும்.
- Mail-குள் சென்று TO என்ற இடத்தில் lawadmissionenquirygovt@gmail.com பதிவிட்டு, பின்னர் subject என்ற இடத்தில் Application No பதிவு செய்ய வேண்டும்.
- அதன்பிறகு விண்ணப்பிக்கும் மாணவர்களின் 10th மார்க் சான்றிதழ் மற்றும் 12th மார்க் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவைகள் அட்டாச் செய்ய வேண்டும்.
- அதுமட்டுமின்றி 12th படித்த பள்ளியில் இருந்து பெறப்பட்ட TCயை பதிவு செய்ய வேண்டும்.
- மேற்கண்ட படிகளை செய்து முடித்த பின்னர் sent பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த மெயில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மேலாளருக்கு செல்லும். அதன்பின்னர் கவுன்சிலிங் தொடர்பாக உங்களுக்கு மெயில் வரும்.கவுன்சிலிங் நடந்த பிறகு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு சென்று admission போட்டு கொள்ளலாம்.
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
வாகன ஓட்டிகளே.., இனி டிராபிக் ரூல்ஸை மீறினால் தப்பிக்க முடியாது
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பகத் பாசில்?
பான் – ஆதார் இணைப்பு… மே 31ம் தேதி வரை காலக்கெடு