Home » செய்திகள் » டாக்டர் அம்பேத்கர் 2024 விருதினை பெற விரும்புவோர் விண்ணப்ப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு !

டாக்டர் அம்பேத்கர் 2024 விருதினை பெற விரும்புவோர் விண்ணப்ப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு !

டாக்டர் அம்பேத்கர் 2024 விருதினை பெற விரும்புவோர் விண்ணப்ப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு !

தற்போது டாக்டர் அம்பேத்கர் 2024 விருதினை பெற விரும்புவோர் விண்ணப்ப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பட்டியல் இனமக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அரிய தொண்டுகளை செய்து வருபவர்களைகருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பியவர்களா நீங்கள் – இனி வீட்டில் இருந்தே ஓட்டுநர் உரிமம் பெறலாம் – எப்படி தெரியுமா?

மேலும் விண்ணப்பப் படிவத்தை ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம். சென்னை-05 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top