பிறந்த குழந்தைகளுக்கு இனி தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
குழந்தைகளுக்கான தடுப்பூசி :
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த தடுப்பூசி தமிழ்நாடு அரசு சார்பில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் நோய் தடுப்பூசி மருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி :
இந்நிலையில் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் தகவல் தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடி ரசீதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அடேங்கப்பா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
மேலும் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்வதற்கான திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அத்துடன் பிறந்த குழந்தைகளுக்கு முதல் மாதத்திலிருந்து 18 வயது வரை 16 தவணைகளாக செலுத்தப்படும் தடுப்பூசிகளை இலவசமாக பெறலாம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் கொண்டுவரவுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.