Home » செய்திகள் » பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தற்போது பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு இந்த மானியம் பெரிதும் உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வேளாண் சார்ந்த தொழிலிலை பட்டதாரி இளைஞர்கள் தொடங்கினால் அவர்களுக்கு வங்கிக்கணக்குடன், வட்டி மானியம் போகக் கூடுதலாக ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில்முனைவோராக மாற்றிடத் தமிழக அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.

மேலும் விவசாயத்தின் மீது இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், விவசாயத்தை மேம்படுத்தவும் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மேலும் இதற்காக 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன உள்ளது? அடேங்கப்பா இத்தனை பொருள் இருக்கா!

மேலும் இந்த திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 40 வயது வரை உள்ள இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் இந்த தமிழ்நாடு அரசின் வேளாண் மானியம் பெற ஒருவர் தனது முதலீட்டில் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய சுய தொழிலை நிறுவ வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top