தமிழகத்தில் அரசு சார்பாக இயங்கி அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் டாக்டர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அதாவது முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கு 5,500 ரூபாய் மற்றும் 9,000 ரூபாய் என்று 2 வகையாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று நேற்று சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக அரசு டாக்டர் சங்கத்தின் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது, இதுவரை முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கு 5,500 ரூபாய் மற்றும் 9,000 ரூபாய் என ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதுநிலை டாக்டர்களுக்கு ஒரே மாதிரியான 9,000 ரூபாய் வழங்கவும், பட்டய படிப்பு டாக்டர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.