100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு. வேலைதிட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவற்காக சுமார் ரூ.1,229 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
100 நாள் வேலைதிட்டம் ஊதிய உயர்வு :
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் இந்த திட்டமானது 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படுகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை அதிகரித்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(சி)-ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 100 நாள் வேலை திட்டத்தில் உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது.
ஏற்காடு மலர் கண்காட்சி 2024 ! மே 22 முதல் 26 வரை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !
இதனையடுத்து தமிழ்நாட்டில் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை ரூ.294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.1,229 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.