சொத்து குவிப்பு விவகாரம்
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவது குறித்த வழக்கில் நடந்த விசாரணையில், பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ”ஜெயலலிதாவின் நகைகளை தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி, இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்றியதற்கான செலவுத் தொகையாக ரூ. 5 கோடியை தமிழக அரசு கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும்” என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நகைகளை தமிழக அரசுக்கு கொடுக்கும் தீர்ப்புக்கு தடை செய்ய கோரி தீபா, தீபக் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.